இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Monday, December 20, 2010

பிரிட்டன் - இலங்கை அரசுக்களிடையே தொடரும் தீவிர இராஜந்ததிர முறுகல்....?



பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், இலங்கை ஜனாதிபதிக்கு
அறிவுரை கூறி அனுப்பிய கடிதம் ஒன்று ஊடகங்களுக்கு பிரசுரிக்கப்படாமல் மறுக்கப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கையில் நல்லாட்சி நிலவவேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பின் போது பிரித்தானிய பிரதமர் இக்கடிதத்தை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மகாராணியாரிடமிருந்து மாத்திரமே கடிதம் வந்ததாகவும், அதை பிரசுரித்துவிட்டதாகவும், வேறு கடிதங்கள் வரவில்லை எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனாலேயே பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் இலங்கை விஜயத்தை இரத்து செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரத்தில் இலங்கை - இங்கிலாந்து இராஜதந்திர முறுகல் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையில் தனது பதவிக்காலம் முடிந்து செல்லும் பிரித்தானிய உயர்ஸ்த்தானிகர் பீட்டர் ஹெய்ஸ் இந்த வார காலை உணவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த போதும், ஜனாதிபதி அதை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா விஜயத்தின் போது புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு குறித்து லண்டன் அமைதியாக இருந்ததே இந்நிராகரிப்புக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

எனினும் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டமை தொடர்பில் இலங்கையின் லண்டனில் உள்ள உயர்ஸ்த்தானிய அதிகாரிகள், பிரித்தானிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரை இந்த வாரம் சந்திக்கவுள்ளனர். அவர்கள் பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை சந்திப்பதற்கான வாய்ப்புக்களையும் கோரியிருந்தனர்.
இந்நிலைமைகள் இவ்வாறிருக்க இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைய வந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் விஜய் நம்பியாரை பர்மாவுக்கான தற்காலிக தூதுவர் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும் எனவும் பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது. அவர் சிறுபான்மை இனங்களின் நலன்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படுகிறார் என அது குற்றம் சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment