இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Monday, January 31, 2011

ஹிட்லரின் அபூர்வ புகைப்படங்கள்...! ஏலத்தில்....!

 
ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரும், இத்தாலி சர்வாதிகாரி முசோலினியும் சந்தித்துப் பேசிய அபூர்வ புகைப்படம் லண்டனில் ஏலம் விடப்பட்டது.

ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் தனிப்பட்ட போட்டோகிராபராக பணியாற்றியவர் ஹென்ரிச் ஹாப்மேன். இவர் ஹிட்லரை பல்வேறு கோணங்களிலும், முக்கிய சந்திப்புகளின் போதும் எடுத்த 600 புகைப்படங்களும், 800 நெகட்டிவ்களும் பாதுகாக்கப்பட்டு வந்தன.

அவற்றில் உள்ள சில போட்டோக்களை லண்டன் ஏல நிறுவனம் ஒன்று அண்மையில் ஏலம் விட்டது. இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லரும், இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும், ஜெர்மனியின் முனிச் நகரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அவர்களை ஹாப்மேன் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார்.





அந்த அபூர்வ புகைப்படம் லண்டன் ஏல நிறுவனத்தால், அண்மையில் ஏலம் விடப்பட்டது. இந்த புகைப்படம், 22 லட்ச ரூபாய்க்கு ஏலம்போனது.
இந்த போட்டோக்கள் தவிர, பள்ளி ஒன்றில் பயிற்சியில் ஈடுபடும் ஹிட்லர், படை வீரர்கள் மத்தியில் சல்யூட் அடிக்கும் ஹிட்லர் உள்ளிட்ட பல்வேறு அபூர்வ புகைப்படங்கள் ஏல நிறுவனத்தில் உள்ளது.

No comments:

Post a Comment